நயன்தாரா படத்துக்கு திடீர் தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் ‘எலெக்ட்ரா’. இதில் நயன்தாராவின் அம்மா – அப்பாவாக மனிஷா கொய்ராலா&பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். ஷியாம் பிரசாத் இயக்கியுள்ளார். இம்மாதம் படம் ரிலீசாக இருந¢தது. இதற்கிடையே திடீரென இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது எர்ணாகுளம் முன்சீப் கோர்ட்.
இப்பட வினியோகஸ்தரான மார்ட்டின் செபஸ்டீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பட தயாரிப்பாளர் விந்த்யன் ஒப்பந்தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் படம் வெளியிடுவது தொடர்பாக நாங்கள் சில வ¤திகளை வகுத்தோம். அதை மீறுவதாக அவரது நடவடிக்கை உள்ளது. எனவே படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ‘எலெக்ட்ரா’ படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படமிது. இப்படத்தால் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நயன்தாரா கூறி வந்தார். பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அவர் அதிர்ச¢சி அடைந்துள்ளார்.


Source: Dinakaran


Source: India Glitz

Comments

Most Recent