நடிகர் முரளியின் இறுதி ஊர்வலம் :திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபல நடிகர் முரளி மாரடைப்பால் நேற்று அதிகாலை திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் நடிகர் முரளி வீடு உள்ளது. மனைவி ஷோபா. காவியா என்ற மகளும் ஆதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். வழக்கமாக அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உடையவர் முரளி. நேற்று காலை 5 மணிக்கு அவரை மனைவி ஷோபா எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஷோபா, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர், ஒரு மணி நேரம் முன்பே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து முரளியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் வளசரவாக்கம் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.  ‌பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல்தகனம் நடைபெற உள்ளது. இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
படங்களுக்கு: http://www.dinakaran.com/murali/murali-dies-of-heart-attack.asp

Comments

Most Recent