ராம்சரணுக்கு மாமியாராக நடிக்கிறார் ஸ்ரீதேவி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிரஞ்சீவி நடிப்பில் ஒரு வருடம் ஓடிய படம் ‘அத்தகு யமுடு அம்மாயிகி மொகுடு’. 1989ல் ரிலீசானது. இதே படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடிப்பில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். பழைய படத்தில் வாணிஸ்ரீ நடித்த வேடம், கதைக்கு மிகவும் முக்கியமானது. சிரஞ்சீவியின் மாமியாராக அவர் நடித்தார். அந்த வேடத்துக்கு இதில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இது பற்றி ஸ்ரீதேவியிடமும் பேசியுள்ளனர். ஆனால் அவர் இன்னும் பதில் சொல்லவில்லையாம். இதற்கு முன் பல படங்களில் நடிக்க கேட்டு, ஸ்ரீதேவி மறுத்து வந்தார். இதிலாவது அவர் நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அதே போல் இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிப்பார் என்றும் தகவல் கிளம்பியுள்ளது.

‘ஸ்ரீதேவியிடம் பேசியிருப்பது உண்மை. மற்றபடி ஜான்வி நடிப்பதாக கூறுவது புரளிதான்’ என்கிறது பட வட்டாரம்.


Source: Dinakaran

Comments

Most Recent