Mandhra Bedi sacked from Sony commentators panel

 http://thatstamil.oneindia.in/img/2010/03/12-mandhra-bedi200.jpg

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் டெலிவிஷன் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார் மந்த்ரா பேடி.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சோனி செட் மேக்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளுக்கு டெலிவிஷன் வர்ணனையாளராக நடிகை மந்த்ரா பேடி கலந்து கொண்டு கிரிக்கெட் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வந்தார்.

விதவிதமான கவர்ச்சி உடைகளில் தோன்றி ரசிகர்களைக் கிறங்கடித்தார். முதல் ஆண்டில் அவரது நிகழ்ச்சி தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் இரண்டாம் ஆண்டு அந்த அளவு வரவேற்பில்லை.

எனவே இந்த ஆண்டு ஐபிஎல் வர்ணனையாளர் பதவியிலிருந்து மந்த்ராவைத் தூக்கிவிட்டது சோனி நிறுவனம்.

மந்த்ரா பேடியின் நிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைந்ததை தொடர்ந்தே அவர் நிகழ்ச்சியில் இருந்து கழற்றி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி சோனி டெலிவிஷன் மற்றும் மந்திரா பேடி தரப்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Comments

Most Recent