Rajkiran acting with Vijay in Bodygaurd remake

 http://thatstamil.oneindia.in/img/2010/03/23-rajkiran200.jpg
பாடிகார்ட் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பவர் அசின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிக்கும் தமிழ்ப் படம் இது.

இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி துவங்குகிறது.

பாடிகார்டு படம் மலையாளத்தில் சுமாரான வசூலையே கொடுத்தது. எனவே அதன் தமிழ் வடிவத்தில் பல மாறுதல்களைச் செய்துள்ளார் இயக்குநர் சித்திக். விஜய்யை வைத்து ஏற்கெனவே ப்ரண்ட்ஸ் படத்தை எடுத்தவர் இவர்.

பாடிகார்டு தமிழ் ரீமேக்கின் இசையமைப்பாளராக வித்யாசாகரும், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படத்திலும் விஜய்க்கு கைகொடுக்க வருகிறார் வடிவேலு. அவரும் எம்எஸ் பாஸ்கரும் இணைந்து காமெடி செய்கிறார்கள் இந்தப் படத்தில்.

படத்தின் பெயர் ஏப்ரல் 1ம் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

Comments

Most Recent