பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த ‘வெடி’ கைவிடப்பட்டது. மோகன் நடராஜன் தயாரிக்க உருவாகவிருந்த இந்தப் படத்தின் கதை குறித...
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த ‘வெடி’ கைவிடப்பட்டது.
மோகன் நடராஜன் தயாரிக்க உருவாகவிருந்த இந்தப் படத்தின் கதை குறித்து விக்ரமுக்கும் பூபதி பாண்டியனுக்கும் ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது.
இதுகுறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர விக்ரமும் பூபதி பாண்டியனும் ஊட்டியில் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் இருவரும் தங்கள் நிலையில் பிடிவாத இருக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று தயாரிப்பாளரிடம் கூறிவிட்டாராம் விக்ரம்.
ஆனால் வேறு இயக்குநர் இயக்குவதாக இருந்தால் நாம் படத்தைத் தொடரலாம் என்று கூறினாராம்.
இதனால் வெடி படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார் மோகன் நடராஜன்.
இந்த நேரத்தில், மதராஸபட்டினம் படத்தை இயக்கிய விஜய் கூறிய ஒரு ஸ்கிரிப்ட் விக்ரமை வெகுவாகக் கவர்ந்துவிட, அதையே அடுத்த படமாகப் பண்ணலாம் என்று மோகன் நடராஜனுக்கு சிபாரிசு செய்ய, அவரும் விஜய்க்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்.
முழு ஸ்கிரிப்டையும் பக்காவாக தயார் செய்துவிட்ட விஜய், இம்மாத இறுதியில் ஷூட்டிங்கை துவங்கும் முடிவில் இருக்கிறார்.
இந்தப் பக்கம் பூபதி பாண்டியனும் சும்மா இல்லை. அவர், விஷாலை வைத்து ஜிகே பிலிம் கார்ப்பரேஷனுக்காக புதிய படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாகிவிட்டார். அவன் இவன் படத்தில் விஷாலின் வேலை முடிந்ததும் இந்தப் புதுப்படத்தை துவங்குகிறார்கள். பெயர் பட்டத்து யானை!
Comments
Post a Comment