சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த ஆண்டு செப்டம்பரில் இமயமலை செல்கிறார். இமயமலையிலிருந்து அவர் திரும்பியதும், சௌந்தர்யா ரஜினி இயக்கும் சுல்தான் தி ...
சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த ஆண்டு செப்டம்பரில் இமயமலை செல்கிறார். இமயமலையிலிருந்து அவர் திரும்பியதும், சௌந்தர்யா ரஜினி இயக்கும் சுல்தான் தி வாரியர் படத்தில் பங்கேற்கிறார்.
ரஜினியின் இரண்டவாது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை வைத்து சுல்தான் தி வாரியார் என்ற அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
படத்தின் 70 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன.
இந்நிலையில், எந்திரன் பட வேலைகளால் சுல்தான் தி வாரியர் படத்தின் வேலைகள் தாமதமாகின. இதற்கிடையே எந்திரன் ஷூட்டிங் முடிந்த கையோடு சில நாட்கள் சுல்தானில் நடித்துக் கொடுத்தார் ரஜினி.
இப்போது எந்திரன் வெளியீடு மற்றும் சௌந்தர்யாவின் திருமண வேலைகளில் ரஜினி பிஸியாக உள்ளார்.
செப்டம்பர் 3-ம் தேதி சௌந்தர்யாவின் திருமணம் நடக்கிறது. அன்றே எந்திரன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் 24-ம் தேதிதான் படம் வெளியாகும் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.
எந்திரன் படம் ரிலீஸானதும், வழக்கம்போல ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
அவர் இமயமலையிலிருந்து திரும்பியதும், சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
2011ல் கோடை விடுமுறை விருந்தாக, சுல்தான் தி வாரியர் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது
Comments
Post a Comment