சத்யராஜ் நடிக்கும் படம் 'கவுரவர்கள்Õ. சஞ்சய்ராம் இயக்குகிறார். இப்பட ஷூட்டிங்கில் சத்யராஜுக்கும் சஞ்சய்ராமுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்...
இது குறித்து சஞ்சய்ராம் கூறியதாவது:சத்யராஜை 15 வருடமாக தெரியும். 'புதிய வானம்Õ என்ற பெயரில் அவரது ரசிகர் மன்றத்தை நடத்தி வந்திருக்கிறேன். அவர் தந்த ஊக்கத்தால்தான் டைரக்டர் ஆனேன். 'வீரமும் ஈரமும்Õ படத்திலேயே சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. சிறு பிரச்னை காரணமாக அது நடக்கவில்லை. 'கவுரவர்கள்Õ படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். வழக்கமாக ஷூட்டிங்கில் அவரது ஸ்டைலில் வசனங்களை பேசுவார்.
ஆனால் இப்படத்தில் அதற்கு வாய்ப்பே தரவில்லை. இது அவர் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், 'என்ன சஞ்சய், இப்படி பண¢ணுற? என்னை பேசவே விடமாட்டேங்க¤ற¤யே. விக் கூட வைக்காம நான் நடிக்கறதுக்கு, இதுதான் நீ தர்ற மரியாதையா?Õ என கோபமாக கேட்டார். கிளைமாக்ஸ் சீன் வந்தபோது ரொம்பவே மூட் அவுட் ஆகிவிட்டார். 3 நாள் அவர் ஷூட்டிங் வந்து நடித்தபோதும் காட்சி சரியாக அமையவில்லை. பிறகு சமாதானம் சொன்னபோது, 'எதோ நீ சொல்றபடி நடிக்கிறேன்Õ என கூறிவிட்டு நடித்து முடித்தார். பிறகு டப்பிங் பேச வந்தபோது அவர் படம் பார்த்தார். 'நீ சொன்ன மாதிரி நடிச்சதாலதான் இந்த ரோல், கதையோட ஹார்ட்டா இருக்குÕ என்று கூறி சந்தோஷமாக டப்பிங் பேசி முடித்தார்.
Comments
Post a Comment