போனி வர்மாவை அறிமுகப்படுத்தினார் பிரகாஷ் ராஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

57&வது பிலிம்பேர் திரைப்பட விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் தமிழில் சிறந்த நடிகராக, 'காஞ்சிவரம்Õ படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகைக்கான வ¤ருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த பூஜாவுக்கு வழங்கப்பட்டது.சிறந்த படமாக சசிகுமார், அனன்யா நடித்த Ôநாடோடிகள்Õ தேர்வானது. சிறந்த இயக்குனர் விருது Ôகாஞ்சிவரம்Õ படத்துக்காக பிரியதர்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த குணசித்திர நடிகராக ஜெயபிரகாஷ் (பசங்க), குணசித்திர நடிகையாக ஷம்மு (காஞ்சிவரம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது 'அயன்' படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு வழங்கப்பட்டது. Ôஅயன்Õ பட பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதை நா.முத்துக்குமார் பெற்றார். பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதை இயக்குனர் ஷங்கரும் இந்தி நடிகை வித்யாபாலனும் இணைந்து வழங்கினர். பின்னர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:இந்த விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இதற்காக 'காஞ்சிவரம்Õ படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி. இங்கு நான்கு மொழியைச் சேர்ந்த எனது நண்பர்கள் கூடியிருப்பதால் முக்கியமான ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் போனி வர்மா. (அவரை மேடைக்கு அழைத்தார்). இதுதான் என்னுடைய செல்லம். என் வாழ்க்கையில் இணைந்திருக்கும் புதிய பெண். இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார்.


நிகழ்ச்சியில் மலையாள நடிகை கே.பி.ஏ.எல் லலிதாவுக்கும், கன்னட நடிகர் அம்ரிஷுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, நடிகர்கள் சூர்யா, சிம்பு, ஷாம், அஜ்மல், சிபிராஜ், கார்த்திக், பிரபுதேவா, சிவகுமார், ஷக்தி, சுமன், ராணா, ராம், இயக்குனர்கள் பாலா, கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், ஹரி, தரணி, பார்த்திபன், வசந்தபாலன், சசிகுமார், சமுத்திரக்கனி, ஆர்.கே.செல்வமணி, நடிகைகள் சமீரா ரெட்டி, காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா, ஸ்ரேயா, அர்ச்சனா, சோனியா அகர்வால், சினேகா, ரீமாசென், சார்மி, லிசா, தேஜாஸ்ரீ, பார்வதி ஒமணக்குட்டன், அம்பிகா, சங்கீதா, மீனாட்சி, நிகிதா, ப்ரியா, சஞ்சனா, சுமலதா, கஸ்தூரி, தேஜஸ்ரீ, ஸ்ரீதேவி விஜயகுமார், பிந்து உட்பட தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு ஜுரி விருது இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மோகன்லால், ஸ்ரீநகர் ரெட்டி, யேக்னா ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.நடிகர் வினித், நடிகைகள் சமீரா ரெட்டி, லட்சுமிராய், பத்மப்ரியா, ஷர்மிளா, லட்சுமி கோபாலசாமி, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது.

Comments

Most Recent